உக்ரைன் மீதான ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உட்பட பல நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உட்பட பல உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த அடிப்படையில் உக்ரைனுக்கு முன்பே 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனுக்கு மேலும் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் வாயிலாக உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உட்பட பல ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க திட்டமிட்டுள்ளள்ள ராணுவ உதவிகள் இந்தியமதிப்பில் சுமார் 5 ஆயிரத்து 713 கோடி ரூபாய் ஆகும்.