சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு கண்ணப்பன் நகரில் கூலி தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டனம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும், ஈஸ்வரன் அர்ஜுனன் என்ற மகன்களும் இருந்துள்ளனர். இதில் ஈஸ்வரன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பும், அர்ஜுனன் 6-ஆம் வகுப்பு படிக்கும் வந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது தந்தை செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை அடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்களுக்கு இடையே தந்தையின் செல்போனை யார் முதலில் எடுப்பது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறுவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு போது அவர்களது அக்கா வேப்பிலைக்காரி தனது தம்பிகளை சமாதானப்படுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அர்ஜுனன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜுனனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.