சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி பொன்னுசாமி மாணவியை தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்களது மகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது மாணவி தனக்கு நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.