இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்களாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு எந்த வேலையும் இருக்கக்கூடாது. இவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். இவர்கள் அரசிடமிருந்து வேறு எந்த ஒரு உதவி தொகையும் பெறக்கூடாது. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மார்ச் 31-ஆம் தேதிக்குள் 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். அதன்பிறகு மே 30-ஆம் தேதிக்குள் பழங்குடியினர் இளைஞர்களுக்கு 45 வயதும், மற்ற பிரிவினருக்கு 40 வயதும் நிறைவு செய்திருக்க வேண்டும்.
ஆனால் மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் மட்டுமே போதுமானது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான ஆண்டு வருமானம் 72,000 ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கு பதிவு செய்ய வரும்போது அசல் கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றை உடன் கொண்டு வந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பள்ளிக்கல்வி, கல்லூரி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பயின்று வரும் பதிவுதாரர்கள், விவசாயம், என்ஜினீயரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்படிப்புகள் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.