மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வீரமலை பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக மணல் கடத்தியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் மணல் கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.