Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்  சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் கலாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 9 ஆயிரம்  வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெறுபவர்களுக்கு ஒட்டு மொத்த தொகை 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, துணை தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய துணைத்தலைவர் வள்ளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |