Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலிலிருந்து தப்பிய ரஷ்ய ஆதரவாளர்…. அதிரடியாக கைது செய்த உக்ரைன் உளவுத்துறை…!!!

உக்ரைன் நாட்டில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக், காவல்துறையிடமிருந்து தப்பி உக்ரைன் உளவுத் துறையிடம் சிக்கியிருக்கிறார்.

விக்டர் மெட்வெட்சுக், உக்ரைன் நாட்டில் இருந்து கொண்டே ரஷ்ய நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார். கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து மற்றும் அந்நாட்டிற்கு எதிராக செயல்பட்டது, போன்ற குற்றங்களுக்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொள்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன்பாக அவரின் மனைவி உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று அவர் வீட்டுக் காவலிலிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உக்ரைன் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |