Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அழுகிய நிலையில் கிடந்த பெண் உடல்…. போலீஸ் தீவிர விசாரணை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

காட்டு பகுதியில் பெண் ஒருவரின் உடல், அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாக்குடி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |