Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்க்கு விண்ணப்பிக்க… இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடுங்க…. இபிஎஸ் வலியுறுத்தல்…..!!!!!

தமிழகத்தில் 2022ஆம் வருடத்துக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் முன்பே அறிவித்திருந்தது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சென்ற 3 நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல்இருக்கிறது. ஆகவே விண்ணப்பிக்கும் தேதியை மேலும் ஒரு வாரம் கால நீட்டிக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன் “என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |