Categories
உலக செய்திகள்

டாக்சியில் பயணித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. ஓட்டுனரின் புகைப்படம் வெளியீடு…!!!

லண்டனில் ஒரு டாக்ஸியில் தனியாக பயணம் செய்த பெண்ணை அந்த ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

லண்டனில் உள்ள இஸ்லிங்டனில் என்ற பகுதியில் கடந்த 7ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு பெண் டாக்ஸியில் ஏறியிருக்கிறார். அப்போது அதன் ஓட்டுநர் Wormwood Scrubs என்ற இடத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதன்பிறகு, அந்த பெண்ணை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு வாகனத்தில் தப்பி விட்டார். அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததையடுத்து 36 வயதுடைய சலாட் அகமது முகமது என்ற அந்த ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தற்போது அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நபரை யாரேனும் பார்த்தால் உடனடியாக 999 அல்லது 101 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |