Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டத் தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார். இவர்கள் சத்துணவுத்  துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் துணைத் தலைவர் அலமேலு, மாவட்ட இணைச்செயலாளர் ஏசுமணி, ஒன்றிய செயலாளர் இந்துமதி, மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவர்கள் போராட்டம் முடிந்த பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமியை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். இதேப்போன்று தியாகதுருகம் பகுதியிலும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட இணைச்செயலாளர் ரக்ஷிதா தலைமை தாங்கினார். இவர்கள் சமையல் உதவியாளர்களுக்கு தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், தயாபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |