அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகத்தில் வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் பாக்கியமேரி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தொழிலாளர்கள் பிரச்சினையில் சுலபமான முறையில் தீர்வு காண வேண்டும், பணியாளர்களை பழிவாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 4 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் , உதவியாளர்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.