Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி” சீறிப்பாய்ந்த காளைகள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!!!

சிறப்பாக மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செல்லியம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னழகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும்  கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில்  புதுக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கு மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளை மாடுகளை அடங்கியுள்ளனர் . இதனையடுத்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள்  மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |