தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தாங்கள் எடுக்காமல் சேமித்த விடுப்பு நாட்களை ஊதியமாகப் பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே பசுமை குழுவையும் தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. குழுவில் தொழில்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Categories