Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ1,01,00,000 மதிப்பு…. எமெர்ஜென்சி லைட்டிற்குள் 2 1/2 கிலோ தங்கம்…. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

எமர்ஜென்சி லைட் பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அபுதாபியில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு பயணியிடம்  சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த எமர்ஜென்சி லைட்டில் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து ஒரு கோடியே ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ 600 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் சுங்கத்துறை  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |