சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சந்தைமேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தைமேடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் செங்குணம் பகுதியில் வசிக்கும் ஜான்பாஷா என்பதும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜான்பாஷாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.