Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு சலுகைகள் – ட்ரம்ப் எதிர்ப்பு… சிக்கல் ஏற்பட கூடும்…!!!

வளரும் நாடுகள் என்ற போர்வையில் இந்தியாவும் சீனாவும், ஏராளமான சலுகைகளை அனுபவித்து விட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்விட்சர்லாந்து உலக பொருளாதாரம்  போரம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் வளர்ந்த நாடுகள் என்று மதிப்பிடப்பட வேண்டும், என்று ட்ரம்ப்  கூறியிருக்கிறார்.   இந்தியாவும் சீனாவும் வளரும் நாடுகள்  எனில் அமெரிக்காவும் வளரும் நாடுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக மையம் அமெரிக்காவுக்கு சலுகைகளை அளிக்கவில்லை என்பதால், அந்த அமைப்போடு தமக்கு மோதல் ஏற்பட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். ட்ரம்பின் இந்த குற்றசாட்டு இந்தியாவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம், என்று தெரிகிறது.

வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து ஏற்கனவே இந்தியா  வெளியேற்றப்பட்டது.  தற்போது வேகமாக வளரும் பெயரில் “பொருளாதார நாடு” என்ற அந்தஸ்தை இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா எடுக்கும், என்ற பன்னாட்டு நிதியம் மூன்று நாட்களுக்கு முன்பு கூறியிருந்த நிலையில், ட்ரம்ப்  இந்த விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்

Categories

Tech |