Categories
அரசியல்

நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தில் அ.தி.மு.க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதனையடுத்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தார்பாய் போட்டு மூடாமல் இருப்பதால் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது என்றார். எனவே கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடி சேமிப்பு கிடங்குக்கு  பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், நெல் அதிகமாக விவசாயம் செய்யும் கிராமங்களில் தானியக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்தார்.‌ அவர் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2,73,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 51 சேமிப்பு கிடங்குகளிலும், 166 திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் ஆன்லைன் மூலமாக விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறினார்.

Categories

Tech |