சமூக நீதிக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர் தந்தை பெரியார் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த ரஜினியின் கருத்து தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழச்சி
“தந்தை பெரியார் இல்லையென்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும், இனமான உணர்வை முன்னெடுத்து இருக்கின்ற அந்த இயக்கம் 50 ஆண்டு காலமாக இல்லை என்றால் சமூகநீதிக்கான ஒரு இடம் கிடைத்து இருக்காது,பெண்களுடைய முன்னேற்றம் இங்கு இவ்வளவு சாத்தியப் பட்டிருக்காது. தமிழகம் பெண்களுடைய கல்வியிலும் சமூக நிலையிலும் 69% நிமிர்ந்து நிற்கின்ற மாநிலமாக இருப்பதற்குக் காரணமான விதை தந்தை பெரியாரும் முத்தமிழ் கலைஞரும் தான்”
என்று கூறினார்.