ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 49-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இதற்கு முன்னதாக ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என்று புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும் சிறு குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் கூட பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் உக்ரைனை சேர்ந்த பெண் ஒருவரும், இரண்டு ரஷ்ய வீரர்கள் தனது கணவர் ராணுவ வீரர் என்று தெரிந்ததும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று கூறியுள்ளார். ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ளது.