Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நீண்ட கால கனவுக்கு…. ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா….!!!!

இந்தியாவின் நீண்ட கால கனவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவது ஆகும். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று முன்தினம் வாஷிங்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்க அமைச்சர்களான லாயிட் ஆஸ்டினையும், ஆண்டனி பிளிங்கனையும் சந்தித்து பேசியுள்ளனர்.

இதையடுத்து கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “இந்தியா அணுசக்தி வினியோக குழுவில் இடம் பெறுவதற்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் அமெரிக்கா ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |