தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தி.மு.க சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி துரை, முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் தயாளமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் நகர பொறுப்பாளர் துரை தாகப்பிள்ளை வரவேற்றார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அடைய செய்த மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.