குறும்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12-ம் வகுப்பு படிக்கும் துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் சிசுக்குரல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த குறும்படத்தின் டீசர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வெளியானது. இந்தப் படத்தின் டீசர் வெளியான அன்றே துர்காதேவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துர்கா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் துர்கா தேவியின் குடும்பத்தினர் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என கூறியுள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே துர்காதேவி மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.