வேன் நிலைதடுமாறி 14 தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிகளை முடித்து விட்டு தொழிலாளர்கள் வேனில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நிலைதடுமாறிய வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.