அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் 177 ஆயுதங்களுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
அசாம் மாநிலம் குவாஹாத்தி பகுதியில் முதலமைச்சர் சர்பானந்த சோனோவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NDS, PRL, LM,மாவோயிஸ்ட் உள்ளிட்ட 8 அமைப்புகளைச் சேர்ந்த 644 பேர் சரண் அடைந்தனர். AK 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அசாமில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.