Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மயிலம் அருகே பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டு”… போலீசார் விசாரணை…!!!

மயிலம் அருகே பூட்டியிருந்த கதவை உடைத்து 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் அருகே இருக்கும் ஐவேலி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் 70 வயதுடைய ராஜேந்திரன். இவரின் மனைவி 65 வயதுடைய தேவகி. இவர்கள் இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார்கள்.

அந்த நேரத்தில் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 18 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு சென்று விட்டார்கள். இதுபற்றி இராஜேந்திரன் மயிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |