சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பது தெரியஷவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிவாவை கைது செய்து அவரிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.