கும்ப ராசி அன்பர்கள்…!!! இன்று குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் நல்லபடியாக முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். இன்று ஆழ்ந்த யோசனையும் அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம், எதிர்பாலினத்தவரிடம் பழகும் பொழுது மிகவும் எச்சரிக்கை வேண்டும். எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேதத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்யத் தோன்றும். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை சரியாகும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும், ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்