இன்று (ஏப்ரல் 14ம் தேதி) மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.