பல வருடங்களாகவே அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மிக குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. அந்த வகையில் அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு வரை விலைவாசி உயர்வு 2% என்ற அளவிலேயே இருந்து வந்தது. அதன் பிறகு 2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்தது.
இதற்கிடையே டிரம்ப் மற்றும் பைடன் அரசுகள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரித்து அதன் மூலம் ரூ. 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நிதி தொகுப்புகளை செயல்படுத்தின. இதனால் அமெரிக்காவில் 6 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சியை எட்டியது.
அதோடு மட்டுமல்லாமல் 2021 செப்டம்பரில் விலைவாசி உயர்வு விகிதம் 5.4 சதவீதமாகவும், 2022 ஜனவரி மாதத்தில் 7.5 சதவீதமாகவும், 2022 மார்ச் மாதத்தில் 8.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சதவீதமாகும்.