Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாதா சந்தா கட்ட சொன்னதால் கோபம்…. அரிவாளுடன் அலுவலகத்திற்குள் புகுந்து….. வாடிக்கையாளர் ரகளை….!!

மாதச் சந்தா செலுத்த கோரி ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கினார்.

 தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியால் தொலைக்காட்சி வாங்கியதற்கான தவணை தொகையை ஓரு மாதம்  செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கண்ணன்னை தொடர்பு கொண்டு பணத்தைச் செலுத்த கோரியுள்ளார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அடியாட்களுடன் வந்து தனியார் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை தாக்கி உள்ளார். இதில் அலுவலக ஊழியர்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீடியோ  ஆதாரத்துடன் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் கண்ணன்னை தேடி வருகின்றனர்.

Categories

Tech |