Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை எதிரொலி…. விமான கட்டணம் திடீர் உயர்வு…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு, நாளை புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 16, 17ஆகிய நாட்கள் என மொத்தம் தமிழகம் முழுவதும் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து மதுரை செல்ல 5 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.9,800- க்கு மேல், திருச்சிக்கு 4 ஆயிரத்தில் இருந்து 8000 வரை, கோவைக்கு 3 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்து உள்ளதுள்ளது. சுற்றுலா தளமான அந்தமான் செல்ல விமானங்களில் ரூ.13,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் விடுமுறையை கொண்டாட பயணிகள் குடும்பத்துடன் பயணிக்கின்றனர்.

Categories

Tech |