டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளான இன்று இவருடைய படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்று திமுகவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 1891 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவு செய்த பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று. இந்தியாவில் புரையோடிக் கிடக்கும் சாதி அமைப்பை அழிப்பதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.
மேலும் இந்தியாவில் 12 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்தது, தொழிலாளர்களுக்கு விடுமுறை, காப்பீடு, மருத்துவ விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் என்ற அடிப்படை தேவைகளை கொண்டுவந்தவர் இவர்.