தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 83 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள், கடல் அரிப்பு தடுப்பு மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். நெல்லையில் 5 கோடி மதிப்பீட்டில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.