தமிழகம் முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ் புத்தாண்டான இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மலையிடை பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தியாம் தமிழ் மொழியை, தங்கள் உயிரினும் மேலாக நினைக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் இளந்தமிழ் போல் இன்புற்றும் செந்தமிழ் போல் செம்மையுடன் வாழ எனது இனிய “சுபகிருது” தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Categories