கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட கோவின் வலைதளத்தைப் போன்றே இதர தடுப்பூசி திட்டங்களுக்கும் பிரத்யேக வலைதளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்து தேசிய சுகாதார ஆணைய தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.எஸ்.சா்மா கூறியதாவது “ரத்த வங்கி, உலகளாவிய தடுப்பூசி திட்டம் போன்றவற்றுக்கு கோவின் வலைதளத்தைப் போன்றே 2 வலைதளங்கள் உருவாக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் முன்பே தொடங்கியுள்ளது. அந்த வலைதளங்களை உருவாக்க 2 மாதங்கள் ஆகும். இந்த வருடத்தில் அவை அறிமுகப்படுத்தப்படும்” என்று தெரிவித்தாா்.
Categories