தமிழகம் முழுதும் சீரானமின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மின்சார விநியோகம் குறித்து திமுக உறுப்பினா் இனிகோ இருதயராஜ் பிரதான கேள்வி எழுப்பினாா். இதையடுத்து உறுப்பினா்கள் சு.ரவி (அதிமுக), சாக்கோட்டை அன்பழகன் (திமுக), சதாசிவம் (பாமக), கோவி செழியன் (திமுக), அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக) போன்றோர் துணைக் கேள்விகளை எழுப்பினா். அதற்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜி பதில் அளித்தபோது “ரூபாதை 625 கோடி மதிப்பில் 8,965 மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தினை முதல்வா் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தாா்.
இத்திட்டப்படி 100 % பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இலவச மின்இணைப்புப் பெற்ற 1 லட்சம் விவசாயிகள் மத்தியில் வருகிற 16ஆஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாற்ற இருக்கிறார். சீரான மின்சாரம் கிடைக்கச்செய்ய துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோடைக் காலத்தைச் சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.