வீட்டின் பூட்டை உடைத்து நகையை பணம் திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் ஆற்றங்கரை பகுதியில் காங்கிரஸ் பிரமுகரான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரமோகன் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம், நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சந்திரமோகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.