அமித் ஷா, 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த 7-ந் தேதி நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாணவர் அமைப்பு போர்க்கொடி உயர்த்தி மத்திய உள்துறை மந்திரி அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
அந்த கடிதத்தில் இந்தி மொழியை பிராந்தியத்தில் கட்டாய பாடமாக திணிப்பது பழங்குடி மொழிகளின் பரவலுக்கு தீங்குகளை ஏற்படுத்தும். மேலும் ஏற்கனவே உள்ள பரந்த பாடத்திட்டத்தில் மற்றொரு கட்டாயத்தை சேர்ப்பது மாணவர்களுக்கு தீங்குவிளைவிக்கும். இது ஒற்றுமைக்கு வழி வகுக்காது. இது அச்சத்தையும் நல்லிணக்கமின்மையையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக வடகிழக்கு பூர்வீக மொழிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.