உலகிலேயே மிகவும் அதிக வயதான கொரில்லா பாஃடோவுக்கு பெர்லின் மிருக காட்சி சாலையில் 65-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
45 முதல் 65 வருட காலங்கள் கொரில்லாக்கள் வாழக்கூடியவை ஆகும். தற்போது கொரில்லாவின் 65-வது பிறந்தநாளை குறிக்கும் அடிப்படையில் இலை அலங்காரங்களுக்கு மத்தியில் கேக் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. உலகின் மூத்த வயது கொரில்லா பாஃடோவை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்தனர்.