Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. வரவு உயரும்… குடும்ப சுமை கூடும்…!!!

துலாம் ராசி அன்பர்கள், இன்று குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். நாடி வந்தவர்களுக்கு உதவிகளை  செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாளாக இன்று  இருக்கும். இன்று குடும்ப விஷியமாக அலைய வேண்டியிருக்கும்.

கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். அதே போல உறவினர் வகையில் உதவிகளும் நீங்கள் செய்வீர்கள். நட்பு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிலும்  உற்சாகம் குறைந்து சோம்பல் கொஞ்சம் ஏற்படும், அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல பொருட்களை, அதாவது சரியான உணவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்தால் மட்டுமே, நம்  வாழ்க்கையில் சில விஷியங்களை மேற்கொள்ள முடியும். அதை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல்  நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவ செல்வங்களுககு எந்த பிரச்சனையும் இல்லை. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.  மற்றவர்களின் முழுமையான ஆதரவை பெறுவார்கள். சக மாணவரின் முழு ஒத்துழைப்பும் பெறுவீர்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது,  நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக  கொடுங்கள் , உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும்7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |