பாடகர் வேல் முருகனின் மகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகர் வேல்முருகன். இவர் கலைமாமணி விருதுகள் மற்றும் 5,000 நாட்டுப்புற கலைஞர்களுடன் கின்னஸ் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வேல்முருகனின் மூத்த மகளான ரஷனாவும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாடகர் வேல்முருகனின் மகள் கின்னஸ் சாதனை படைத்ததற்கு குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்க சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் ரஷனா வேல்முருகன் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் இந்நிகழ்வில் வேல்முருகன் மனைவி கலா மற்றும் இளைய மகள் ஆகியோர் உடன் இருந்தனர்.