விஜய் டிவியின் ”செந்தூர பூவே” சீரியல் முடிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”செந்தூரப்பூவே”. கடந்த சில மாதங்களாக இந்த சீரியலின் டிஆர்பி குறைந்து வரும் காரணமாக இந்த சீரியல் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புது சீரியல் ஒளிபரப்பு செய்வதற்காக இந்த சீரியல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சீரியலின் கடைசி காட்சியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.