கலிபோர்னியாவில் உள்ள விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ளது கொரோனா மாநகராட்சி விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் 4 பயணிகளுடன் புறப்பட்டது.
விமானம் உயரே எழும்பும் போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விமானம் புறப்பட்டு உயரே எழும்பிய போது, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியின் மீது மோதியதால் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை நேரில் கண்ட தீயணைப்பு அதிகாரி மற்றும் பைலட் இருவரும் இந்த தகவலை கூறியுள்ளார்.