விவசாய கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து பரிதாபமாக இறந்து விட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தாலுகா உட்பட்ட சித்தர்குடிபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு 50 அடி ஆழ விவசாய கிணறு ஒன்று சொந்தமாக உள்ளது. இதில் இரண்டு வயது மதிப்புமிக்க புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அதனைக் கண்ட பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள்.
இதனால் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த மானை மீட்டு கால்நடை மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தார்கள். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக ஒரத்த நாட்டில் அமைந்துள்ள தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.