நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. விஜய் படங்கள் என்றாலே எப்போதும் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ நல்ல வசூல் வந்துவிடும். ஆனால் இந்த படத்திற்கு நேற்று பல காட்சிகள் புக் கூட ஆகவில்லையாம்.
மேலும் படம் பார்த்த அனைவரின் கருத்து என்ன நெல்சன் இப்படி என்பது தான். எல்லாரும் எதிர்பார்ப்பது ஒரு நல்ல காமெடி படத்தில் விஜய் எப்படி வருவார் என்பது தான். ஆனால் இது காமெடி படமா அல்லது விஜய் படமா என யாருக்குமே தெரியலையாம். இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த் படம் பார்த்தது போல இருந்துச்சு. இருந்தபோதும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர் அவர்கள் பட்டாசு வெடித்தும், கட்டவுட் வைத்தும் கொண்டாடி தனது மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக பீஸ்ட் படத்தின் டிரெய்லரில் விஜய் திரையை கிழித்து என்ட்ரி கொடுப்பதுபோல காட்டப்பட்டிருக்கிறது. அதன்பின் மற்றொரு காட்சியில் துப்பாக்கி வைத்துக் கொண்டு விஜய் தீவிரவாதிகளை சுடுவதை போல அமைந்திருக்கும். இந்த நிலையில் இந்த காட்சிகளை கலாய்க்கும் விதமாக அனைத்து ஸ்பூஃப் செய்து காமெடியாக வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் காமெடி பிரபலம் ராமர் திரையை கிழித்து என்ட்ரி கொடுக்கிறார்.
அதன்பின் என்ன பயமா இருக்கா, இனிமேதான் பயங்கரமா இருக்கும் அப்படின்னு விஜய் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காமெடியை பார்த்து நிஷா உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் விழுந்து விழுந்து சிரித்து உள்ளன. தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.