வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் திரைப்படம் சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்திருக்கிறார். இந்த படத்தை எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். காவலர் பயிற்சி பள்ளி உள்ளே நடைபெறும் பிரச்சினைகள், பயிற்சி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை கண்முன்னே பார்க்க முடிகிறது.
மேலும் இந்த படத்திற்காக விக்ரம் பிரபு கடினமாக உடற்பயிற்சி செய்து ஒன்பது கிலோ எடையை குறைத்திருக்கிறார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலும் குறிப்பாக விக்ரம் பிரபு மற்றும் எம்எஸ் பாஸ்கர் போன்றோரின் நடிப்பும் மெச்சும்படியாக அமைந்திருந்தது. இந்த நிலையில் டாணாக்காரன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு உள்ளதாக விக்ரம் பிரபு கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நான் கனவு காணக் கூட தயங்கும் ஒன்று நடந்திருக்கிறது. எத்தனை அருமையான உணர்வு சூப்பர்ஸ்டார் அவர்கள் அழைத்து என்னைப் பாராட்டி இருக்கிறார். நம் கனவை விடாப்பிடியாக பின்பற்றுவதே வாழ்க்கையில் இது போன்ற அற்புதமான நிகழ்வுகளை உருவாக்கும் என்பது உண்மை. மேலும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என கூறியுள்ளார்.