Categories
அரசியல்

“டி20 போட்டிகள்”… 2வது இந்திய வீரர் எனும் சாதனை படைத்த ரோகித் சர்மா…..!!!!!

IPL கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதி கொண்டது. அப்போது டாஸ் வென்ற மும்பை அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலாவதாக பேட்டிங் பிடித்த பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து குவித்தது. இதில் மயங்க் அகர்வால் 52 ரன், தவான் 70 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் விளையாடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து குவித்தது. இதன் மூலமாக பஞ்சாப் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் மும்பையணியின் கேப்டன் ரோகித்சர்மா டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்தியவீரர் எனும் சாதனை படைத்து உள்ளார். இதேபோன்று IPL கிரிக்கெட் வரலாற்றில் மும்பையணியின் கேப்டன் ரோகித்சர்மா 500 பவுண்டரிகள் அடித்து அசத்தி உள்ளார். இதனால் 500 பவுண்டரிகள் அடித்த 5-வது வீரராக ரோகித் சர்மா ஆகியுள்ளார்.

Categories

Tech |