Categories
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால்…. உக்ரைனின் அதிகார மையம் அழிக்கப்படும்… ரஷ்யா எச்சரிக்கை…!!!

ரஷ்ய நாட்டின் நிலப்பரப்பின் மேல் தாக்குதல் மேற்கொண்டால் உக்ரைன் நாட்டின் அதிகார மையத்தை தாக்குவோம் என்று பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உக்ரைன் நாட்டில், ரஷ்யா 45 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல பகுதிகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய நாட்டின் பெல்கோரோட் என்ற பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இரண்டு போர் ஹெலிகாப்டர்கள் தீப்பற்றி எரிந்துள்ளது.

மேலும் இரண்டு நபர்கள் பலத்த காயமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டிற்குள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய நாட்டின் நிலப்பரப்பு மேல் தாக்குதல் மீண்டும் மேற்கொள்ளப்பட்டால் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட அதிகார மையங்கள் அனைத்தும் அரச படையினரால் தாக்கி அழிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Categories

Tech |