முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சர்ச்சை சாமியார் உத்திரபிரதேசம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன்னால் இந்துமத சாமியார் ஒருவர் சீப்பில் அமர்ந்தபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். சீதாபூர் ஒரு மசூதி அருகே அவரது ஜீப் பயணித்த போது இந்தப் பகுதியில் என்பது பெண்களுக்கானது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால் இந்த சமூக பெண்களை கடத்தி சென்ற பொது வெளியே வைத்து அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
சாமியாரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடன் அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். சாமியாரின் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. இதனையடுத்து சர்ச்சை சாமியார் மீது உத்தரப் பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆன நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.